மதிப்புற்குரிய சுப.வீ அய்யா அவர்களே,தமிழகத்தின் பெரும்பான்மையான அரசியல் வாதிகள் ஈழ
மற்றும் புலிகளின் ஆதரவானவர்கள் தான்.சில சூழ்நிலைகளில் அவர்களின் நிலைப்பாட்டின்
வீரியமும் தடுமாற்றங்களும் நிகழ்ந்திருக்கும்.அது நிச்சயம் குற்றம் ஆக கருத
முடியாது.அவர்கள் அரசியல் நிலைப்பாடு ஒரு காரணியாக இருந்திருக்கும்.இங்கே வோட்டு
வாங்க வேண்டுமென்றால்,ஈழமும்,தமிழும் எவருக்கும் தேவை.ஆனால்,கலைஞர் மட்டுமே தன் குதிரைகளுக்காக இறுதி போரில் வாய் மூடி
மௌனியாக இருந்தார்.இதை விட அவரின் தகுதிக்கு மிகவும் குறைவான சில நாடகங்களையும்
நடத்தினார்.நாங்கள் ஆதரவை விளக்கி கொண்டாலும்,மைய அரசுக்கு எந்தவித
நெருக்கடியும் ஏற்படப்போவதில்லை,அதனால் எந்த பயனும் இல்லை என்றார்.ஆனால் இவர் அதை
செய்திருந்தார் என்றால் இப்பொழுது அவரின் கண்ணீரை நம்பியிருப்போம்.தன்னுடைய தமிழ்
ஈழ உணர்வை நிலைபடுதிகொள்ள,எதிர்ப்பை பதிவு செய்ய இதை விட நல்ல சந்தர்ப்பம் எந்த
அரசியல்வாதிகளுக்கும் கிட்டஆத ஒன்று.ஆனால் எதற்கு அதை செய்யவில்லை என்பது கனிமொழி,ராஜா,அழகிரி,தவிர தமிழகத்தில் உள்ள
பச்சை குழந்தைக்கு கூட தெரியும்.கலைஞரை மதிக்கிறோம்,போற்றுகிறோம்,ஆனால் நம்ப
மாட்டோம்.சுப.வீ அவர்களை,மதிக்கிறோம்,நம்புகிறோம்,ஆனால் ஈழ பிரச்னையில் கலைஞர் ஆதரவு நிலைபாட்டை
மன்னிகமட்டோம்.நீங்களே சொன்னிர்கள் என்னை எதிர்பவர்கள் நான் கலைஞருடன் இருப்பதால்
என்னை எதிர்கிறார்கள் என்று.தெரிந்தும் தொடர்வது ஏன்?உங்களுக்கு எந்த பிணைப்பும்
இருக்கவேண்டிய அவசியம் இல்லையே?நிறைவாக இந்த தலைமுறையில் எதனை பேர் உங்களின் பகத் சிங்
புத்தகத்தை படித்து சமூக போராட்டத்திற்க்கு வந்தார்கள் என்று தெரியாது?ஆனால் 1995 களில் அதை படித பொழுது
ஒரு முழு இரவு நான் தூங்கிடவிலை.அது ஒருவரின் வாழ்க்கை குறிப்பையும் தாண்டி பல
சமூக அரசியல் சிந்தனைகளையும் தூண்டியது.நீங்கள் இந்த சமூகத்திற்கு,இந்த தலைமுறை
இளைங்கர்களுக்கு செய்யவேண்டியது இதை தான்.நாங்கள் உங்களை வைத்திருப்பது வேறு ஒரு
தளத்தில்.கலைங்கருக்காக உங்களை சுருக்கிகொண்டதுபோதும்.
வினோசுப்ரா@வினோத்குமார்.வி.எம்.எஸ்.

