You talk when you cease to be at peace with your thoughts.” ― Khalil Gibran மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்க கற்றுக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை என்பதே மணல் வீடு கட்டும் பிரயத்தனம்தான்
Saturday, 24 September 2011
VINOSUBRA.BLOGSPOT.COM: WILL SMITH-The Pursuit of Happyness
VINOSUBRA.BLOGSPOT.COM: WILL SMITH-The Pursuit of Happyness: வில் ஸ்மித் என்ற சகாப்தம் ஒரு நடிகன் படத்தின் எல்லா காட்சிகளையும் தன்வசப்படுத்த முடியுமா? அதைத்தான் தன் மகனுடன் இந்த படத்தில் ...
WILL SMITH-The Pursuit of Happyness
வில் ஸ்மித் என்ற சகாப்தம்
ஒரு நடிகன் படத்தின் எல்லா காட்சிகளையும் தன்வசப்படுத்த முடியுமா?
அதைத்தான் தன் மகனுடன் இந்த படத்தில் செய்திருப்பார்.உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட காவியம்.
படத்தின் ஆரம்ப காட்சிகளில் ஒன்றில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து வில் ஸ்மித் புரியாத ஏக்க உணர்வோடு தன் நிலையை நினைத்து வருத்தப்பட்டு கொள்வார்.பின்னர் கடைசி காட்சிகளில் அதே மகிழ்ச்சிபொங்கும் காட்சி,ஆனால் இதில் வில் ஸ்மித்தும் மகிழ்ச்சியாக உலகத்தை பார்ப்பார்.
தன்னுடைய கஷ்டகாலங்களிலும் தன்னுடைய மகனின் உலகத்தை அவர் புரிந்து நடந்துகொள்கின்ற பாணியில் அமைக்கப்பட்ட திரைக்கதை எல்லா தந்தைகளிடமும் பிள்ளைகள் எதிர்பார்க்கின்ற விஷயம்.வளமான செல்வசெழிப்பான தேசமாக மட்டுமே நமக்கு ஹாலிவுட் திரைப்படங்களால் சித்தரிக்கப்பட்ட ,அமெரிக்காவின் நடுத்தர மற்றும் வசதியற்றவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை,நமக்கு துகிலுரித்து காட்டும் காட்சிகளும் அருமை.
நெஞ்சை வருடும் சில காட்சிகள்:
1 வீடில்லாமல் ரயில்நிலையத்தின் கழிப்பறையில் செய்தி தாளை விரித்து மகனை மடியில் கிடத்தி உறங்கும்போது ,அவர் தன் இயலாமையை எண்ணி மருகி உதிர்க்கும் கண்ணீர் நம்மை நனைத்துவிடும்.
2 தன் சூழ்நிலையால் ,அழுக்கு சட்டையுடன் ,முகத்தில் காய்ந்து ஒட்டிக்கொண்ட paintudan ,நேர்முகத்தேர்வுக்கு சென்ற அவரிடம்,தேர்வாளர்கள், இப்படி இந்த தோற்றத்துடன் ஒருவர் உங்கள் முன்னால் இருந்தால் தங்களுக்கு என்ன தோன்றும் என்று கேட்கும்போது ,அவர் நல்ல pant அணிந்திருப்பார் என்று நினைப்பேன் எனச் சொல்லும்போது,அந்த கதாப்பாத்திரத்தின் பிரதிபலிப்பை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
௩. jaden ஸ்மித் -சிறுவன் நம் மனதை அள்ளி சென்றுவிடும் கதாப்பாத்திரம்.தந்தைக்கு "கடவுள் அனுப்பிய படகு" கதையை சொல்லிகொண்டே தாவி தாவி நடந்து வரும்பொழுது நம்முடன் ஓட்டிகொள்கின்றான்.
ஒரு மனிதன் கடும் முயற்சியும்,ஆர்வமும் இருந்தால் எந்த வயதிலும் புதிய அறிமுகமில்லாத துறையில் கூட சாதிக்கமுடியும் என்ற கருத்தை, ஒரு மனிதனின் வாழ்வோட்டத்தின் சோகங்களுடன் பிணைத்து உணர்வுப்பூர்வமாக பதிககும் படம்.
இந்தபடத்தை பார்க்கும் ஒவ்வொருமுறையும் வெவ்வேறு புதிய பரிமாணங்களையும் ,நம் வாழ்க்கையை நாம் எப்படி புரிந்து வைத்திருக்கிறோம் என்பதையும் இது வெளிக்காட்டும்.
Thursday, 22 September 2011
JUST KICKEDOFF
STARTED............
KEEP SCRIBBLING...............
NEVER ENDS..........
KEEP SCRIBBLING...............
NEVER ENDS..........
Subscribe to:
Comments (Atom)
